பிரியாணிக்கு முக்கியமான விஷயமே மசாலாதான். அந்த ரகசிய மசாலா ரகசியம் இதோ உங்களுக்காக *நட்சத்திர சோம்பு – 2 டேபிள் ஸ்பூன் *பிரியாணி இலை – 6 *பட்டை – 5 *கிராம்பு – 2 *டேபிள் ஸ்பூன் *ஏலக்காய் – 2 டேபிள் ஸ்பூன் *ஜாதிக்காய் – 3 *மிளகு – 1 டேபிள் ஸ்பூன் *தனியா – 2 டேபிள் ஸ்பூன் *காய்ந்த மிளகாய் – 7 செய்முறை: அடுப்பில் வைத்து மிதமாக சூடு செய்யவும். அதில், நட்சத்திரப் பூ, பட்டை, பிரியாணி இலை, பட்டை, ஜாதிக்காய், ஏலக்காய், காய்ந்த மிளகாய், கிராம்பு, தனியா, மிளகு சேர்த்து மிதமாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் இதனை ஆறவைத்ததும், மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும். அவ்வளவு தாங்க.. கமகமக்கும் பிரியாணி மசாலா ரெடி. ஒரு கிலோ மட்டன் பிரியாணிக்கு 2 டேபிள் ஸ்பூன் அளவும், ஒரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு ஒன்றரை டேபிள் ஸ்பூன் அளவும், மீன் பிரியாணிக்கு ஒரு டேபிள் ஸ்பூன் அளவும், குஸ்கா, முட்டை பிரியாணிக்கு முக்காய் டேபிள் ஸ்பூன் மசாலா அளவும் சேர்த்தால் சுவையாக இருக்கும்.. Post navigation வாய்ப்புண் ஏற்பட காரணங்கள்