பொன்னியின் செல்வன் 2 வெளியாகி ஒரு பக்கம் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், சனி, ஞாயிறு மற்றும் மே 1ம் தேதியான திங்கள் வரை திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்ஃபுல் போர்டுகள் மாட்டி வருகின்றனர். அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை சுமார் 70 ஆண்டுகாலமாக தமிழ் மக்கள் வாசித்து வருகின்றனர். வீராணம் ஏரியை முதன் முதலில் வந்தியத்தேவன் பார்ப்பது தொடங்கி கடைசியாக சேந்தன் அமுதனுக்கு மணிமுடி கிடைப்பது வரை அனைத்து விஷயங்களையும் அறிந்து வைத்துக் கொண்டே பொன்னியின் செல்வன் படத்திற்காக பல ஆண்டுகளாக ரசிகர்கள் காத்திருந்தனர். எம்ஜிஆர் முதல் ராஜமெளலி வரை பலரும் முயற்சித்தும் முடியாமல் போன பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் கடைசியாக வெற்றிப் பெற்று ரசிகர்களுக்கு அந்த பிரம்மாண்ட காவியத்தை படமாக காட்டி விட்டார் மணிரத்னம். அவரது மிகப்பெரிய முயற்சிக்கு பலனாக முதல் பாகத்திற்கே 500 கோடி வசூலை அள்ளித் தந்த தமிழர்கள் அடுத்த பாகத்திற்கும் மிகப்பெரிய வசூலை வாரிக் கொடுக்க காத்திருக்கின்றனர். இயக்குநர் மணிரத்னமே இந்த படத்தை இயக்க பல ஆண்டுகளாக கனவு கண்டு வந்தார். இந்த படத்தை இயக்க மல்டி ஸ்டாரர்களை வைத்து ஒரு ட்ரையல் பார்க்கவே செக்கச் சிவந்த வானம் படத்தையே இயக்கினார் மணிரத்னம் கல்கி நாவலுக்காக எழுதியதில் இருந்து எந்தவொரு ஆன்மாவும் போகாமல் பார்த்துக் கொண்டோம் என நினைக்கிறேன். மூலக் கதையை சரியாக முடிக்க வேண்டும் என்பதால் சில கிளைக் கதைகளை சொலல் முடியவில்லை. அல்லது மாற்ற வேண்டிய நிலை வந்து விட்டது. ஆனால், படமாக பொன்னியின் செல்வன் 2 யாரையும் ஏமாற்றாது என நம்புகிறேன் என சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார்.